அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் விக்டோரியா நுலண்ட் இலங்கை வந்துள்ளார்.
இவர் நேற்று (31) நாட்டை வந்தடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருட நிறைவைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதே விக்டோரியா நூலண்டின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக தம்மால் இயன்ற ஒத்துழைப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.