யாழ் சாவச்சேரியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணடமடைந்துள்ளார். தனது மனைவியினை மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில்அனுமதித்து விட்டு, பத்திய சாப்பாட்டுக்கான உணவு பொருட்களை வாங்கி கொண்டு வீடு செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதியிலிருந்து தனது வீட்டு வீதிக்குள் திரும்பும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை அடித்து தூக்கி வீசியுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி வதனி ஜூவலரி உரிமையாளரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மக்களினாலும் தாக்கப்பட்டு மேலும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவரின் மனைவிக்கு நேற்று(31.01) குழந்தை பிறந்துள்ளது.
வேகம் விபத்துக்களை தினமும் அதிகரித்து செல்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. சீரற்ற காலநிலையும் காணப்படும் நிலையில் ஓட்டுநர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும். இந்த விபத்து ஒரு குடும்பத்தை பாதிப்புள்ளக்கியுள்ளது. குழந்தை தகப்பனின்றி அவதிப்படப்போகிறது. காயமடைந்தவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பல கஷ்டங்கள். விபத்துகள் சம்மந்தப்பட்டவர்களை மாத்திரமல்ல மேலும் பலரையும் கஷ்டப்படுத்தும். வாகனங்களில் ஒவ்வொரு தடவை ஏறும் போதும் நிதானம், அவதானம் என்பனவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.