தனித்துவமிக்க இலங்கையின் சுற்றுலா தளங்களுக்கு மற்றுமொரு அங்கீகாரம்!

இலங்கை மற்றும் அதன் தனித்துவமான சுற்றுலா தளங்கள் உலகத்தவர் மத்தியில் தொடர்ந்தும் கவனத்தை ஈர்த்து வருகின்றன, மேலும் மீண்டும் ஒருமுறை அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற வாசகங்களுடன் பல சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Bigseventravel.com பயண இணையத்தளத்தினால் 2023ம் ஆண்டின் உலகின் 50 ‘இன்ஸ்டாகிராம் பதிவிடக்கூடிய’ தீவு நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது இடத்தில் உள்ள இலங்கை, பாலி, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகியவற்றை பின்தள்ளியுள்ளது.

இது ஏனைய சில சுற்றுலா இடங்களைப் போல் நன்கு அறியப்பட்டதாக இருக்காது, எனினும் நிச்சயமாக பார்வையிடத் தகுந்தது என பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விளக்கத்தில்,
“13 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள் மற்றும் 16.4 பில்லியன் TikTok பார்வைகளுடன், சிகிரியாவின் பழங்கால பாறை கோட்டை, தென் பகுதியின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தனித்துவமான பல சுற்றுலா தளங்கள் இலங்கையில் உள்ளன” என்று குறித்த பயண இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தரவரிசைப்படி முதல் 10 இடங்களை இத்தாலியின் மிலன், லண்டன், இங்கிலாந்து, பாரிஸ்-பிரான்ஸ்,  இஸ்தான்புல்-துருக்கி, நியூயார்க்-அமெரிக்கா, நேபாளம், சிகாகோ-அமெரிக்கா, பாலி- இந்தோனேசியா மற்றும் சிட்னி-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

தனித்துவமிக்க இலங்கையின் சுற்றுலா தளங்களுக்கு மற்றுமொரு அங்கீகாரம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version