சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 09 யுவதிகள் உட்பட 34 பேரை கைது செய்துள்ளனர்.
பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04.02) அதிகாலை சுற்றிவளைத்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களிடமிருந்த சில போதைப்பொருட்களையும் மதுபான போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இந்த விருந்தின்போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவமொன்றும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானித்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து, பொலிஸ் பிணையில் விடுவிக்கவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
