துருக்கியில் மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை இராணுவம் தயார்!

துருக்கியில் மீட்பு பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குழுவில் ராணுவ மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொறியியல் படை அதிகாரிகள் பலரும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி தூதரகத்தின் அறிவிப்பை அடுத்து எந்த நேரத்திலும் புறப்பட இந்த குழு தயாராக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை இராணுவம் தயார்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version