துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,200ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆகவும், துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,400 ஆகவும் பதிவாகியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இதுவரையில் 70 நாடுகள் நிவாரண சேவை குழுக்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக மெக்சிகோ சிறப்பு பயிற்சி பெற்ற 16 நாய்கள் அடங்கிய குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலை காரணமாக துருக்கியில் 3 மாத காலங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
