காணாமல் போனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது – இந்தியா வெளியுறவு செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய விடயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமரை இலங்கைக்கு இராஜாங்க விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பதாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி அவர்கள், காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார் என ஜனாதிபதி ஊடக தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்த அதேவேளை
இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்றும்,
அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா அவர்களிடம் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்து, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இந்தியாவின் பங்களிப்பு தேவை என்பதனையும், சுற்றுலா துறையை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளது இணைந்த செயற்பாடு அவற்றின் முக்கியத்துவம் தொடர்பிலும் தங்கள் தரப்பு கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான ஆதிகால தொடர்புகளை ,மீண்டும் கட்டியெழுப்ப வேண்டாம்னேஅவுன் ஜனாதிபதி கேட்டுககொண்டுள்ளார் .

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, தெரிவித்த ஜனாதிபதி,
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர், கொவிட் கட்டுப்பாட்டுக்கு இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் நீண்ட நேர தெளிவுபடுத்தல் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்கள் சமனாக இருப்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமென்றும் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version