இராஜங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு, குடியகல்வு விதி முறையினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை தேவையில்லை என குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு நீத்தவான் மன்ற பிரதம நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் கொழும்பு, பிரித்தியானிய உயர்ஸ்தானிகராலயத்தில் டயானா கமகேயின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டயானா கமகே இரட்டை பிரஜா உரிமை கொண்டிருப்பதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
இரண்டு பிறப்பு சான்றிதழ்களை கையளித்து இரண்டு கடவுச்சீட்டுக்களை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பெற்றுக்கொண்டமைக்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாகவும் மேலும் பிரதம நீதிபதி தெரிவித்துள்ளார்.
