ஆஷிக்கு எதிராக இந்தியா அபாரம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா நாக்பூரில் நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டி இன்று ஆரம்பித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி இந்தியா அணியின் பந்துவீச்சில் தடுமாறிப்போனது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரம்ப விக்கெட்களை உடைத்துக் கொடுக்க தொடர்ந்து அழுத்தங்களை வழங்கி சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

உபாதைகளிலிருந்து மீண்டு வந்த ரவீந்தர் ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஜடேஜாவின் 11 ஆவது ஐந்து விக்கெட் பெறுதி இதுவாகும். அஷ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களை கைப்பற்றிய ஒன்பதாவது பந்துவீச்சாளர் என்ற மைற்கல்லை தாண்டினார். அணில் கும்ளேயிற்கு அடுத்த படியாக 450 விக்கெட்களை அஷ்வின் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்னஸ் லபுஷேன் 49 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 37 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரி 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடிப்பாடி வரும் இந்தியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களை பெற்றுள்ளது. ரோஹித் ஷர்மா 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். லோகேஷ் ராகுல் 20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மூன்றாம் இலக்கத்தில் இரவு காப்பாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் துடுப்பாட இறங்கியுள்ளார். அஷ்வின் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக ஓட்டங்களை சிறப்பாக கடந்த காலங்களில் பெற்றுள்ளார். இந்தப் போட்டியிலும் அவர் ஓட்டங்களை பெறும் வாய்ப்புகளுள்ளன.

ரொட் மேர்பி வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை கைப்பற்றினர்.

இந்தியா அணி சார்பாக விக்கெட் காப்பாளர் ஸ்ரீகர் பரத், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டனர்.

ஆஷிக்கு எதிராக இந்தியா அபாரம்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version