150 அடி பள்ளத்தில் விழுந்த கார் – ஒருவர் பலி!

லக்கல, ரிவர்ஸ்டன் மாத்தளை வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்ற கார் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் விழுந்ததில் 34 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை மாத்தளையில் இருந்து லக்கல நோக்கி சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த கார் சாரதி உட்பட ஐவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி கான்ஸ்டபிளின் மனைவி உயிரிழந்துள்ளார்.

மாத்தளை தலைமையகப் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதுடன் காயமடைந்தவர்களில் அவரது குழந்தை, மனைவியின் சகோதரி மற்றும் அவரது குழந்தை உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

150 அடி பள்ளத்தில் விழுந்த கார் - ஒருவர் பலி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version