இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு புதிய இணையதளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி/சுயேச்சைக் குழுவின் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த தகவல்களைப் பெற்றுகொள்வதற்கு புதிய இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தெரிவு செய்ய விரும்பும் வேட்பாளர்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.
விவரங்களை https://eservices.elections.gov.lk/pages/ec_ct_KYC_LGA.aspx மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
