கற்பிட்டி கடற்கரையில் கையொதுங்கிய திமிங்கலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த திமிங்கலங்கள் ‘பைலட் வேல்’ வகையைச் சேர்ந்தவை என்றும், அவை கரையொதுங்கிய பின், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சிலர், திமிங்கலங்களின் மேல் ஏறியும், அவற்றின் இறக்கைகளை இழுத்தும் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடலில் இருந்து கரையொதுங்கிய திமிங்கிலங்கள், உயிரிழந்தவையாக கருதப்பட்டாலும், நிலத்தில் அவற்றின் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதால், அவை உயிரிழந்துள்ளதை இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது எனவே இவ்வாறான துன்புறுத்தல்கள் முற்றிலும் தவறானவை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறே அந்த திமிங்கிலம் இறந்து கிடந்தாலும், இறந்த விலங்கின் உடல் என்பது பொம்மை அல்ல என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இவர்களின் இந்த செயற்பாடு, விலங்கு வதை சட்டத்தின் பிரிவு 2 மற்றும் 3 மற்றும் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 30 இன் கீழ் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த இரண்டு சட்டங்களின்படி இது அப்பட்டமான குற்றமாகும் என்பதால், பிடியாணை இன்றி கூட இந்த குழுவை கைது செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்களில் உள்ள பெரியவர்கள் மீது, இந்த தவறான செயலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்நாட்டின் சுற்றாடல் கல்வியறிவு மற்றும் மனிதநேயப் பிரச்சினையை இந்த சம்பவம் தெளிவாகக் காட்டுவதாக சுற்றாடல் ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்ணீரில் வாழும் விலங்குகள் நிலத்தில் மிக விரைவாக நீரிழப்புக்கு ஆளாவதால், அந்த விலங்குகளின் உடலிற்கு செய்யும் இவ்வாறான செயல்கள் சித்திரவதை என்றே கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தெருக்களில் உறங்கும் நாய்கள் மீதும் கற்கள் வீசும் இந்த நாட்டில் விலங்குகளின் சடலங்களின் மேல் நின்று புகைப்படம் எடுப்பதைத் தவிர வேறெந்த பாதுகாப்பையும் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
