பாகிஸ்தான் அணியை வென்ற இந்தியா அணி

இந்திய மகளிர் அணி உலககிண்ண போட்டிகளில் தனது முதலாவது போட்டியினை பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றது. பொதுவாகவே இந்திய பக்கிஸ்தான் போட்டிகள் இந்திய பாக்கிஸ்தான் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருந்து வருகின்றன. அதுவும் தற்பொழுது இடம்பெறும் ஆசியகிண்ண போட்டிகளை பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மாற்றினால் ICC பாக்கிஸ்தான் அணி உலககிண்ண போட்டிகளில் பங்குபற்றாது என கூறியிருப்பது தற்பொழுது கிரிக்கட் உலகில் பிரதான செய்தியாக உள்ள நிலையில் இன்று இந்திய பாக்கிஸ்தான் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக காணப்படுகின்றது. காயம் காரணமாக ஸ்மித்தி மந்தான பங்குபற்றாமை இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக காணப்ட்டது பெரிய இலக்கு ஒன்றினை எதிர்த்து ஆடும் போது ஒரு சிறந்த துடுப்பட்ட வீராங்கானையின் பற்றாக்குறை போட்டியில் தெளிவாக தெரிந்தது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 T20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 10 போட்டிகளை இந்திய அணியும் 03 போட்டிகளை பக்கிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. உலக கிண்ண போட்டிகளில் இந்திய பக்கிஸ்தான் அணிகள் 06 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 04 போட்டிகளிலும் பாக்கிஸ்தான் அணி 02 போட்டிகளிலும் வெற்றியினை பதிவுசெய்திருந்தன. மேலும் இறுதியாக விளையாடிய 05 போட்டிகளில் 04 இல் இந்திய அணியும் 01இல் பாக்கிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றய போட்டி இந்திய அணியே வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமாகியது. நாணயசுழச்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணியின் தலைவி பிஸிமா மரூப் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். துடுப்பாட்டத்தில் பிஸிமா மரூப் 68 ஒட்டத்தினையும் ஆயிஷா நசீம் 43 ஒட்டத்தினையும் பெற்றுக்கொடுக்க பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 16 ஓவர்களில் 109 ஓட்டங்களை மாத்திரமே பாக்கிஸ்தான் பெற்றிருந்தது. இறுதி 04 ஓவர்களில் 41 ஓட்டங்களை பாக்கிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது. இந்திய அணி குறித்த 04 ஓவர்களில் ஒரு run out மற்றும் இரு பிடியெடுப்பினை தவறவிட்டிருந்தமை 41 ஓட்டங்களை பெற்று பாக்கிஸ்தான் பெரிய இலக்கினை நிர்ணயித்துக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிதானமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. ஷபாலி வேர்மா 33 ஓட்ங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியும் 16 ஓவர்கள் முடிவில் 109 ஒட்டங்களையே பெற்றிருந்தது. 04 ஓவர்களில் 41 ஓட்டங்கள் பெறுவது என்பது கடினமான விடயமாகவே கருதப்பட்டது. ரிச்சா கோஷ் மற்றும் ஜெமிமாஹ் ரோன்றிகுஸ் இன் இணைப்பாட்டத்தில் பெறப்பட்ட 58 ஓட்டங்கள் 19 ஓவர் முடிவில் இந்திய அணியினை வெற்றியுடன் தொடரை ஆரம்பிக்க செய்துள்ளது. 18 வது ஓவரில் ரிச்சா கோஷ் இனால் தொடர்ச்சியாக பெறப்பட்ட மூன்று நான்கு ஓட்டங்களுடன் 31 ஓட்டங்களும் 19 வது ஓவரில் ஜெமிமாஹ் இனால் பெறப்பட்ட மூன்று நான்கு ஓட்டங்களுடன் 53 ஓட்டங்களும் இந்திய வெற்றிக்கு வழிவகுத்தன. போட்டியின் ஆட்ட நாயகியாக ஜெமிமாஹ் ரோன்றிகுஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

-ரவிநாத்-

பாகிஸ்தான் அணியை வென்ற இந்தியா அணி
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version