தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார். தேர்தலை தாமதிப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும், இலங்கையர்களின் அடிப்படை உரிமையினை மீறும் செயல் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனநாயகம் என்பது சலுகை அல்ல எனவும், இது அடிப்படை உரிமை எனவும் மேலும் சஜித் கூறியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் விருப்பத்துக்கு எதிராக, நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் செயற்பாட்டுக்கு தாம் ஒரு போதும் துணைபோக மாட்டோம் எனவும் கூறியுள்ள சஜித், நியாயமான சுதந்திரமான தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை முன்வைத்துள்ளார்.