ICC T20 உலக கிண்ணம் – இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் வெற்றி

ICC T20 உலக கிண்ணம் - இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் வெற்றி

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் மகளிர் உலகக்கிண்ண போட்டிகளின் குழுநிலை போட்டிகள் இடம்பெற்றுவருக்கின்றன. நேற்றய தினம்(13.02) இடம்பெற்ற முதலாவது போட்டியில் குழு இரண்டில் உள்ள இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணியின் தலைவி லுரா டெலனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியின் கேபி லுவிஸ் பெற்றுக்கொடுத்த 36 ஓட்டங்களுடன் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கற்றுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சோபி எக்லிஸ்ஸ்டான் மற்றும் சாரா கிளென் தலா மூன்று விக்கற்றுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அலிஸ் கேப்செயின் அதிரடியான அரைச்சதத்துடன் 14.2 ஓவர்களில் 107 ஓட்டங்களை பெற்று நான்கு விக்கெட்களினால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில் அலிஸ் கேப்செய் 22 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அயர்லாந்து அணி சார்பில் காரா முரேய் மூன்று விக்கற்றுக்களை வீழ்த்தினார்.

இரண்டாவது போட்டியில் குழு ஒன்றில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணியின் தலைவி சுனே லுஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் ச்லோயி ட்ரையானின் 40 ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 06 விக்கற்றுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ஏடேன் கார்ஸன் மற்றும் லேயா டஹுகு தலா இரண்டு விக்கற்றுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 65 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து வீரர்கள் யாரும் சிறப்பாக செயற்படவில்லை. பந்து வீச்சில் தென்னாபிரிக்க வீராங்கனை மலாபா மூன்று விக்கற்றுக்களையும் காஃப் மற்றும் ட்ரொயின் தலா இரண்டு விக்கற்றுக்களையும் வீழ்த்தினர்.

போட்டிகளை நடாத்தும் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியுடன் தோல்வியடைந்துள்ள நிலையில் தமது முதற் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்தக் குழுவில் காணப்படும் இலங்கை அணி அரை இறுதி நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் இலகுவாக்கப்பட்டுள்ளன.

மகளிர் உலகக்கிண்ண போட்டிகளில் இன்றய போட்டிக்காக குழு ஒன்றில் உள்ள அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதவுள்ளன.

-ரவிநாத்-

https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version