போதைமாத்திரைகளுடன் மருத்துவர் கைது!

145 போதைமாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (14.02) இரவு கைது செய்துள்ளனர்.

கைதான வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் கார் மற்றும் அவர் வைத்திருந்த போதைமருந்துகளும் பதுளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியர் இன்று (15.02) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

போதைமாத்திரைகளுடன் மருத்துவர் கைது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version