செட்டிகுளம் நேரியகுளத்தில் வீடொன்றுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (14.02) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேரியங்குளம் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்த தந்தை மற்றும் அப்பகுதி மக்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தேடியபோது சிறுவன் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது, அதன் பின்னர் உடனடியாக சிறுவனை மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
