இலங்கை கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இந்த வாரம் ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென நம்பப்படுகிறது.
வேட்பு மனு கோரலுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றிலிருத்து 30 ஆம் திகதிக்கு இடையில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இலங்கை கிரிக்கெட் இதுவரை அறிவித்தலை மேற்கொள்ளவில்லை.
ஏற்கனவே நீண்ட காலமாக பதவிகளில் இருந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அடங்கலாக பல புதிய விதிமுறைகள் விளையாட்டு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இம்முறை இலங்கை கிரிக்கெட் தேர்தல் விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி, மே மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்தவது என இலங்கை கிரிக்கெட்டின் விசேட பொதுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முன்னாள் நீதியரசர்களான மாலனி குணரட்ன, ஷிரோமி பெரேரா, மற்றும் பல அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றிய கலாநிதி D.M.R.B. திஸாநாயக்க ஆகியோர் தேர்தல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.