தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரி மனுதாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 இற்கு ஏற்படுத்தபப்ட்டுள்ள அரச தடைகளை நீக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முதனமை வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் இன்று(15.02) புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை (16) காலை 10.00 மணிக்கு புதுக்கடை மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதமர் டினேஷ் குணவர்தன, சகல அமைச்சரவை அமைச்சர்கள், ஆறு கட்சிகளது செயலாளர்கள், தேர்தல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், அமைச்சரவை செயலாளர், பொதுசேவைகள், உள்நாட்டு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரி மனுதாக்கல்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version