தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றில் விசேட பிரேரணை

தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் விசேட பிரேரணையினை தாக்கல் செய்யவுள்ளது . 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இந்த விசேட பிரேரணை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

போதிய நிதி இல்லாமை, போக்குவரத்துக்கு போதிய எரிபொருள் விநியோகம் இல்லாமை, அரசாங்க அச்சகத்தால் வாக்குச் சீட்டுகளை அச்சிட இயலாமை அடங்கலாக மேலும் பல பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஒன்றிணைந்து எதிர்கட்சிக்களின் கூட்டணி, மார்ச் 09 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தமக்கு அறிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

தேர்தல் நடைபெறுவதுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த மனுத்தாக்கலை செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றில் விசேட பிரேரணை
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version