ரக்பி உலகக்கிண்ணம் இலங்கை வருகை தந்து கோலாகலமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை CR&FC மைதானத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட கிண்ணத்தை ஏரளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். காலை 5 மணிமுதல் மலை 5 மணி வரை மக்கள் பார்வைக்காக கிண்ணம் வைக்கப்பட்டிருந்தது.
இரவு வேளையில் பிட்டகோட்டேயில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கொமெர்ஷியல் வங்கியின் ஏற்பாட்டிலான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தெற்காசிய தலைமையதிகாரி விகாஷ் ஷர்மா கலந்து கொண்டிருந்தார். அவரோடு கொமெர்ஷியல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி (COO) பிரபாகர் கலந்து கொண்டிருந்தார். மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் சந்துன் ஹப்புகொட கிண்ணத்தை நிகழ்வில் கையளித்தார்.
இது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், கொமெர்ஷியல் வங்கி இந்த நிகழ்வில் இணைந்திருப்பது பெருமையான விடயம் எனவும் பிரபாகர் நிகழ்வில்
கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிகழ்வு இலங்கையில் நடைபெறுவது சிறப்பான விடயமென விகாஷ் ஷர்மா கறுத்தது கூறினார். அத்தோடு சுற்றுலா அமைச்சு, விளையாட்டு அமைச்சு என்பன சிறப்பான ஆதரவினை வழங்கி வருவதாகவும் அவே மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், மற்றும் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
