பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானிய தூதுவர்!

நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI HIDEAKI அவர்கள் (17.02) அன்று பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சொலோமஸ்தானத்தில் இடம்பெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

பொலன்னறுவையின் புராதன வரலாறு குறித்து மிகவும் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்த அவர், பொலன்னறுவையின் கட்டிடக்கலையை பாராட்டியதுடன், வரலாற்று சிறப்பு மிக்க நகரமான பொலன்னறுவையில் மேலும் பல புதிய வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் புதிய முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சீகிரியா மற்றும் பொலன்னறுவை போன்ற இடங்களை ஜப்பானிய சுற்றுலா பயணிகள் அதிகமாக ரசிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்விஹார, திவங்க சிலை, ரன்கோத் வெஹெர, வட்டதாகே மற்றும் மகா பராக்கிரமபாகு மன்னரின் அரண்மனைக்கும் விஜயம் மேற்கொண்டார்.

பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானிய தூதுவர்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version