நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுநீரகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விரைவில் நலமடைவார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிகின்றன.
நடிகர் பிரபு விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
