மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.02) மாலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. அதிகமான பலத்த மழை
பெய்ய கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.