பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (24.02)மாலை பனாகொட இராணுவ முகாமின் 12வது பீரங்கி படையணிக்கு முன்பாக இந்த இராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார் அதன் பின்னர் உடனடியாக பனாகொட இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். எனினும் இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.