சுற்றுலா பயணிகளுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 மொழிகள் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுற்றுலாத் துறையின் பல பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன், இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் இந்த செயலி கொண்டிருக்கும் என்பதுடன் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் இந்த செயலியில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் இந்த செயலியை கண்காணிக்க முடிவதுடன், ஏதேனும் அசம்பாவதங்கள் நேர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இது உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சுற்றுலாப் பகுதிகளில் முச்சக்கர வண்டி சாரதிகள் முறைகேடாக நடந்துகொள்ளும் அதிக சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்த மொபைல் செயலியில் பணம் செலுத்தும் முறையும் சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும், இந்த புதிய செயலி மார்ச் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளதுடன், சுற்றுலாத் துறையின் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்திய அமைச்சர், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கான புதிய செயலி அறிமுகம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version