விடுதலை புலிகளின் புலானய்வு பிரிவு முன்நாள் உறுப்பினர் சற்குணம் என அழைக்கபப்டும் 47 வயதான சபேசன் என்பவர் நேற்று(06.10) இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக்க இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் இலங்கைக்கு கடத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இவர் கைது செய்யப்பட்டதாக இந்தியா, தேசிய விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ் நாடு, சென்னை வலரசவாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாகாக்கத்திற்கு பணம் சேர்க்கும் முகமாக இந்த கடத்தலில் ஈடுபட்டதாக இந்தியா, தேசிய விசாரணைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள விடுதலை புலிகளோடு தொடர்புடையவர்களோடு பல கூட்டங்களை நடாத்தியுள்ளதாகவும், இலங்கையிலுள்ள முன்நாள் விடுதலை புலிகள் உறுப்பினர்களோடு இணைந்து இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுவதாகவும் குறித்த விசாரணைகளில் தெரியவந்துளளதாக குறித்த அமைப்பு தெரிவித்துளளது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் இந்தியா, தேசிய விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
