பெங்களூரின் கனவு தளர்ந்தது

ஐ . பி . எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று(06.10) நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணி 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணியின் ஜேசன் ரோய் 44(38) ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 31(21) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 3(4-33) விக்கெட்களையும், டான் கிறிஸ்டியன் 2(3-14) விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல் 41(52) ஓட்டங்களையும், கிளென் மஸ்வெல் 40(25) ஓட்டங்களையும் பெற்றனர். சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணி 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலமாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இரண்டாம் இட கனவு தளர்ந்தது. தற்போது 16 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

இன்று (07/10/2021) பிற்பகல் 3:30 இற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
மாலை 7:30 இற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது

பெங்களூரின் கனவு தளர்ந்தது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version