மின் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்!

தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது சொந்த செலவில், தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட 30 – 90 வரையிலான மின்சார அலகுகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் 5 மில்லியன் மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக தாம் செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version