தேர்தலை நடாத்த அமெரிக்கா அழுத்தம்

உடனடியாக நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய அமெரிக்க செனட் சபை இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலை நடத்தாமல் தவிப்பது மக்களின் குரலை அடக்கும் செயல் எனவும், மக்களின் உரிமைகளை மீறும் செயல் எனவும் செனட் சபை கூறியுள்ள அதேவேளை, ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான விடயத்திற்கான விவாதத்தின் போதே இந்த விடயம் செனற்சபையில் பேசப்பட்டுள்ளது.

தேர்தலை நடாத்த அமெரிக்கா அழுத்தம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version