இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச எரிசக்தி நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சியசாலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் அதனைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2009 மற்றும் 2014ல் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னர் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து இதுவாக பதிவாகியுள்ளது.