உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்கு தீர்மானித்துள்ளது.
மார்ச் ஒன்பதாம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்த நிலையில், வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பான பிற வசதிகள் தொடர்பான எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சிக்கல்கள் காரணமாக, தேர்தல் பிற்போடப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த தீர்மனிக்கப்பட்டுள்ளது.
