வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (07.03) காலை மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்து வவுனியா நீதிபதி பார்வையிட்டுள்ளார்.
தற்போது சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இந்த குடும்பத்தின் தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
