அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றும் (09.03) முதல் பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 13ம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவளிக்கும் என அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் நெருக்கடி நிலை மேலும் வளர்ச்சியடையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் கலாநிதி பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version