அதிக புகை வெளியேற்றினால் உடன் அறிவிக்கவும்!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் 070 350 0525 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அறிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்து துறையின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் கொழும்பு பஸ்டன் மாவத்தையில் தனியார் பஸ்களில் புகை பரிசோதனை செய்யப்படுவதாகவும், கடந்த மாத சோதனையில் 40 வீதத்துக்கும் அதிகமான பஸ்கள் புகை பரிசோதனையில் தோல்வியுற்றதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இங்கு பழுதடையும் வாகனங்கள் 14 நாட்களுக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே குறித்த வாகனத்திற்கான வருமான உரிமங்கள் சரிபார்க்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் புகையை வெளியிடும் வாகனங்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புகைப் பரிசோதனையில் தோல்வியடையும் வாகனங்கள் வெரஹெர தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்படாவிட்டால் நினைவூட்டல் வழங்கப்படும் என்றும், அதை கடைபிடிக்காவிட்டால், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும், அவ்வாறு ஏற்பட்டால் அவர்களுக்கு சாதாரண முறையில் வருவாய் உரிம பாத்திரம் பெற முடியாது போகும் என்பதை கவனத்திற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக புகை வெளியேற்றினால் உடன் அறிவிக்கவும்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version