அகடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த பாடலூக்கான பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றிருந்த நிலையில் ஒஸ்கார் விருதினையும் வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.