தொழுநோயாளிகளை அடையாளம் காணும் முகமாக வீடுகள் மட்டத்தில் மக்களை பரிசோதனை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது இரண்டு தொழுநோயாளிகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், இலங்கையில் கண்டறியப்பட்ட தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக பதிவாகியுள்ளதுடன், அதில் 246 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.