புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாதவர்களுக்காக, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு தேவையான பாதுகாப்பான நிலையமொன்றைத் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நிலையத்தை விரைவில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த நிலையத்தின் ஊடாக, பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.