அத்தியாவசிய சேவையாக்கப்பட்ட தபால் சேவை!

நேற்று (13.03) முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை அத்தியாவசியமான பொதுச் சேவையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலில் தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பேணுவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், துறைமுகங்கள், விமான நிலைய பணிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை, அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார்.

Social Share

Leave a Reply