யாழில் சக்திவாய்ந்த குண்டும், கைக்குண்டும் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் கடந்த 12ம் திகதி அதிசக்தி வாய்ந்த குண்டும், கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணி ஒன்றில் அதிசக்திவாய்ந்த வெடிகுண்டு புதைக்கப்பட்டிருந்ததை அவதானித்த காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு விரைந்த காங்கேசன்துறை பொலிஸார் வெடிகுண்டை எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கேசன்துறை அன்ரனிபுரம் கடற்கரையில் மணலுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டை அவதானித்த பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் கைக்குண்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த குண்டுகள் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply