பிலியந்தலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

பிலியந்தலை சுவாரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதுடைய, திருமணமான குறித்த பெண், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாய் வீட்டுக்கு வந்த பெண்ணே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று (15) இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version