“ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக எனும் “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக எனும் “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15 .03) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றிருந்தது.

இந்த சந்தேக நபர்கள் இருவருடன் மேலும் ஆறு பேர் அந்த குழுவில் இருந்ததாகவும் அதில் நந்துன் சிந்தக என்பவற்றின் மனைவி என கூறப்படும் வெளிநாட்டு பெண்ணும் அந்த குழுவில் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குழுவினர் கடந்த 7ம் திகதி மடகாஸ்கர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version