மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு பாதுகாப்பு சேவைகள் துறையில் 10,000 வேலை வாய்ப்புகளை கூடுதலாக வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புக்களுக்கு மேலதிகமாக இந்த வேலைவாய்ப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14.03) நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் சமீபத்திய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக வெளிநாட்டுப் பணம் அனுப்புவதன் மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதே எமது இலக்காகும். மேலும், வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோரின் நலனுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டம் தொழிலாளர்களின் நலன்களை உள்ளடக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.