மாணவர்களை கொடுமைப்படுத்திய ஆசிரியர்கள் உட்பட நால்வர் கைது!

கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி மேற்பார்வையாளர்கள் பாடசாலையின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் நேற்று (14.03) குறித்த ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.03) 10 மாணவர்களைத் தாக்கி கொடுமைப்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டி பொது வைத்தியசாலையில் உள்ள நீதி வைத்திய அதிகாரியின் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டி பிரதேச பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Social Share

Leave a Reply