தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு – மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 16,016 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் 2,407 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31 நாட்களில் 2,392 டெங்கு தொற்றாளர்கள் மட்டுமே பதிவாகியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கணிப்பின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply