நேற்று (19.03) மாலை பன்வில – நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக்கி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரம்பனையிலிருந்து பயணித்த சிறிய ரக லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் லொறியில் பயணித்த 11 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், லொறி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதிகள் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.