மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களின் மலை மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இந்த எச்சரிக்கை நாளை (21.03) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply