இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதி வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி இன்று (21.03) விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நிதி உதவி கிடைத்தவுடன் நாட்டின் டொலர் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு நாட்டுக்கு கிடைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.