சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட நிதி வசதியின் நிதியை பொது நிதி பராமரிப்புக்காக பயன்படுத்த முடிந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
புளூம்பேர்க் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்றுள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நெருக்கடி நிலையை தணிக்க இந்த நிதி நிவாரணத்தை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.