நூற்றாண்டுகால சிறப்பை கொண்டாடும் வகையில் சிலோனிஸ் ரக்பி மற்றும் காற்பந்து கழகம்(CR & FC), 7 பேரடங்கிய ரக்பி தொடரை ஏற்பாடு செய்துள்ளதாக நேற்று(23.03) அறிவித்துள்ளது.
கழக மற்றும் பாடசாலை பிரிவு என இரு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 12 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளன. பாடசாலை போட்டிகளில் பலமான ரக்பி அணிகளான ரோயல் கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி ஆகியவை பங்கு கொள்ளவுள்ளன.
வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இசிப்பத்தன அணி, ஷகீரா கல்லூரி அணியுடன் முதற் போட்டியினை ஆரம்பிக்கவுள்ளது. வித்யார்த்தா கல்லூரி, ட்ரினிட்டி கல்லூரி, பரி தோமாவின் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, பிலியந்தல மத்திய கல்லூரி, கிங்ஸ்வூட் கல்லூரி, DS சேனநாயக்க கல்லூரி ஆகிய அணிகளும் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற கழக லீக் போட்டிகளில் கடுமையாக மோதிய கண்டி கழகம் மற்றும் சிஆர் & எஃப்சி அணிகள் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளமை குழு A இல் கடும் விறு விறுப்பை ஏற்படுத்தவுள்ளது. இந்த குழுவில் பொலிஸ் மற்றும் இராணுவ அணிகள் இடம்பிடித்துள்ளன.
குழு B உல் பலமான அணியாக எதிர்பார்க்கப்படும் வான் படை அணி, மற்றும் ஹவலொக் அணி, CH & FC அணி, கடற்படை அணி ஆகியன இடம்பிடித்துள்ளன.
இம்மாதம் 31 ஆம் திகதி முதல் 02 ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.
சிலோனிஸ் ரக்பி மற்றும் காற்பந்து கழகம் ஆங்கிலேய கேணல் E.H ஜோசப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையர்களுகாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கழகம் எனவும், ரக்பி விளையாட்டு ஐரோப்பாவில் பிரபலமாக காணப்பட்ட நிலையில், அது இலங்கையிலும் வேகமாக மக்கள் மத்தியில் பரவி இப்போது முக்கியமான விளையாட்டாக மாறியுள்ளதாக CR&FC தலைவர் ரெட் முத்தையா கருத்து வெளியிட்டுள்ளார்.